Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
காத்திடும் திரைஏழும்-கிழிந்திடக் கண்டிடும் காட்சி எவர் விண்டிடத் தகும். திரைகள் ஏழு என்ன என்பதை திடஞானம் கொண்டலராம் வடலூர் வள்ளல் பிரான் அவர்கள் அருளியுள்ளார்கள். உலகில் மனிதகுலத்தைப் பீடித்துள்ள மாயை என்னும் திரைகள் ஏழு 1. கருப்புத்திரை - மாயாசக்தி 2. னீலத்திரை - கிரியா சக்தி 3. பச்சைத் திரை - பராசக்தி 4. சிகப்புத்திரை - இச்சாசக்தி 5. பொன்மைத்திரை - ஞானசக்தி 6. வெண்மைத்திரை – ஆதிசக்தி 7. கலப்புத்திரை- சிற்சக்தி கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால் அரைசது மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பேருறு நீலப் பெருந்திரை அதனால் ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பச்சைத் திரையால் பரவெளி அதனை அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி செம்மைத் திரையால் சித்துறு வெளியை அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி கலப்புத் திரையால் கருதனு பவங்களை அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry